மும்பை: பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், கரீனா கபூர், அனுஷ்கா, பிரியங்கா சோப்ரா, கங்கணா ரணவத் உள்ளிட்ட்டோர் அணிந்த பழைய ஜீன்ஸ்களை ஏலத்தில் விட்டு அதில் வரும் பணத்தை ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவுக்குக் கொடுக்கவுள்ளனராம்.
பெங்களூரைச் சேர்ந்த பரிக்ரமா என்ற அமைப்பு இந்த ஏலத்தை நடத்தவுள்ளது. இதில் கிடைக்கும் பணத்தை ஜெனரேஷன் என்ற பெயரில் தான் அமைக்கும் புதிய பிரிவின் கீழ், ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு வழங்கவுள்ளதாம் பரிக்ரமா.
இந்த ஏலத்தில் நடிகர், நடிகைகள் பயன்படுத்திய ஜீன்ஸ் பேன்ட்டை மட்டும் ஏலம் விடுகின்றனராம். அமிதாப் பச்சன் இதற்காக தனது கையெழுத்திட்ட இரண்டு ஜீன்ஸ் பேண்ட்டுகளைக் கொடுத்துள்ளாராம். இதேபோல ஷாஹித் கபூர், சைப் அலி கான், அனில் கபூர் ஆகியோரும் தங்களது ஜீ்ன்ஸ்களைக் கொடுத்துள்ளனராம்.
இந்த ஏலத்திற்காக ஜீன்ஸ்களை கொடுத்துள்ள நட்சத்திரங்கள் அதில் தங்களது கையெழுத்தையும் போட்டு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment