சுந்தரபாண்டியன், நெல்லை சந்திப்பு, துள்ளி எழுந்தது காதல்... - இன்னிக்கு மூணு!

|

Friday Releases Sundara Pandiyan   

இந்த வெள்ளிக்கிழமை மூன்று நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

சசிகுமாரின் சுந்தரபாண்டியன்தான் இந்த மூன்றில் பெரிய படம்.

சுந்தர பாண்டியன்

இது சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு. எஸ் ஆர் பிரபாகரன் இயக்கியுள்ளார். சசிகுமாரின் முன்னாள் உதவியாளர் இவர்.

எஸ்ஆர் ரஹ்நந்தன் இசையமைத்துள்ளார். சசிகுமாருக்கு ஜோடி லட்சுமி மேனன். பரோட்டா சூரி, விஜய் சேதுபதி, அப்புக்குட்டி ஆகியோரும் உண்டு. தலைப்பு பிரச்சினையைக் காட்டி படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கினாலும், பின்னர் சமரசமாகிவிட்டதால், திட்டமிட்டபடி படம் வெளியாகிறது.

நெல்லை சந்திப்பு

நவீன். கே.பி.பி இயக்கியிருக்கும் படம் நெல்லை சந்திப்பு. மலேஷியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் இசையமைத்துள்ளார்.

ரோகித், பூஷன், மேகா நாயர் நடித்துள்ள இந்தப் படத்தில், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனும் நடித்துள்ளார் (ஆனால் படத்துக்கு இவர் தயாரிப்பாளர் அல்ல..)

டி கிரியேஷன்ஸ் திருமலை, யங் சினி ட்ரீம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

துள்ளி எழுந்தது காதல்

ஸ்ரீஹரிநானு இயக்கத்தில் வெளியாகும் படம் துள்ளி எழுந்தது காதல். இசை - போபோ சசி. ராஜா, ஹரிப்ரியா, பூமிகா, சிறப்புத் தோற்றத்தில் அனுஷ்கா மற்றும் 40 புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். தெலுங்கிலிருந்து டப்பாகி தமிழுக்கு வந்துள்ள படம் இது.

இந்தப் படங்கள் தவிர இரண்டு இந்திப் படங்களும் வெளியாகின்றன.

 

Post a Comment