ரஹ்மான் பாடல்களைக் கேட்க தவம் கிடக்கிறேன், என்கிறார் நடிகர் தனுஷ்.
முதல் முறையாக அவர் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். படத்துக்கு தலைப்பு மரியான். ரஹ்மானை வைத்து வந்தே மாதரம், ஜனகனமண ஆல்பங்களைத் தயாரித்த பரத் பாலாதான் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் பார்வதி மேனன் நாயகியாக நடிக்கிறார். படம் முக்கால்வாசி முடிந்தவிட்ட நிலையில், இறுதிக் கட்டப்படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குகிறது.
படத்தின் பாடல்களை சூப்பர் வேகத்தில் போட்டுக் கொடுத்துவிட்டாராம் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான்.
இதுபற்றி தனது பிளாகில் எழுதியுள்ள தனுஷ், "தேசிய விருது, ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஏ ஆர் ரஹ்மான் அற்புதமான பாடல்களை இந்தப் படத்துக்குத் தந்திருக்கிறார். ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம். பிரமாதம். அவற்றின் இறுதி வடிவத்தைக் கேட்க தவம் கிடக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மீனவர் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
Post a Comment