தென்றலுக்கு என்ன ஆச்சு? சக்சேனாவிடம் கைமாறுகிறது?

|

Is Thendral Goes Saxena Hand
மத்திய அமைச்சராக உள்ள ஜெகத்ரட்சகன் கடந்த திமுக ஆட்சியின்போதே ஆரம்பித்த சேனல் தென்றல்.

அவரது தினசரி பத்திரிகை மூடப்பட்டதும், அந்த அலுவலகத்தை அப்படியே தென்றலுக்கு மாற்றிக் கொடுத்தார்கள்.

சோதனை ஒளிபரப்பு நடந்து, பின்னர் சேனலும் ஆங்காங்க லேசாக எட்டிப் பார்த்தது. ஆனால் ஏனோ முழு வீச்சில் நடக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக, இந்த சேனலை ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் ஐயப்பன் நடத்தப் போவதாக செய்தி வெளியானது.

இதற்கிடையே, தென்றலை செழியன் என்பவரது நிர்வாகத்தில் ஒப்படைத்துள்ளாராம் ஜெகத்ரட்சகன்.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, தென்றல் டிவி நிர்வாகத்தை தற்காலிகமாக செழியனிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அடுத்த மாதமே இந்த சேனல் சக்சேனா - ஐயப்பன் குழுவிடம் போகிறது. அவர்களும் ஏற்கெனவே சேனல் ஆரம்பிக்கும் நோக்கத்தில் இருந்ததால், இந்த டீலை ஒப்புக் கொண்டார்களாம்.

இதுகுறித்த பேச்சுவார்த்தைகளும் முடிந்துவிட்டனவாம். தென்றல் சேனலில் சக்சேனா தரப்பு 26 சதவீதம் முதலீடு செய்யப் போவதாகவும் தெரியவருகிறது.

ஜெகத்ரட்சகன் இன்னொரு சேனலுக்கான உரிமமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment