மும்பை: தனது படமான ராம் லீலாவில் நடித்து முடிக்கும் வரை கர்ப்பமாகக் கூடாது என்று பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி கன்டிஷன் போட்டதால் தான் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை கரீனா கபூர் இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி எடுக்கும் படமான ராம் லீலாவில் நடிக்க பல நடிகைகள் விருப்பம் தெரிவித்தபோதிலும் அவர் கரீனா கபூரை ஒப்பந்தம் செய்யவே விரும்பினார். பன்சாலி படத்தில் நடிப்பது என்பது பல இந்தி நடிகைகளின் கனவாகும். அப்படி இருக்கையில் இந்த வாய்ப்பு தன்னைத் தேடி வந்ததில் கரீனாவுக்கு ஏக மகிழ்ச்சியாக இருந்தது.
இந்நிலையில் கரீனா தனக்கும், சைப் அலி கானுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்ற குண்டைத் தூக்கிப் போட்டார். உடனே பன்சாலி தனது படம் முடியும் வரை கர்ப்பமாகக் கூடாது என்று கன்டிஷன் போட்டுள்ளாராம். அவரது கன்டிஷனை ஏற்க மறுத்ததால் கரீனா இந்த பட வாய்ப்பை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக மாதுர் பண்டர்கரின் ஹீரோயின் படத்தில் ஒப்பந்தமான பிறகு ஐஸ்வர்யா ராய் தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தார். அதன் பிறகு படத்தை பரண் மேல் வைக்கலாமா என்று யோசித்த இயக்குனர் இறுதியில் கரீனாவை வைத்து படத்தை எடுத்து ரிலீஸும் செய்துவிட்டார். மாதுரின் நிலைமை தனக்கும் வரக் கூடாது என்பதில் பன்சாலி தெளிவாக உள்ளார் போலும்.
Post a Comment