கவர்ச்சியும் சினிமாவில் ஒரு அங்கம்.. நான் கவர்ச்சிக்கு ரெடி! - ஸ்வாதி

|

I M Ready Do Glam Roles Says Swathy

சென்னை: சினிமாவில் கவர்ச்சியும் ஒரு அங்கமாகிவிட்டது. எனவே நானும் அந்த மாதிரி வேடங்களில் நடிக்கத் தயார் என்று சுப்பிரமணியபுரம் பட நாயகி ஸ்வாதி கூறியுள்ளார்.

‘சுப்பிரமணியபுரம்', 'போராளி' படங்களில் நடித்தவர் ஸ்வாதி. தெலுங்கு, மலையாளத்திலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக உள்ளார்.

குடும்பப்பாங்கான கேரக்டர்களை மட்டுமே ஸ்வாதி செய்து வருகிறார். இதனால் கதாநாயகியே குத்தாட்டம் ஆட வேண்டிய கட்டாயம் உள்ள தமிழில் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.

தன் வாய்ப்புகள் வேறு நடிகைகளுக்கு செல்வதால், தானும் கவர்ச்சி களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கவர்ச்சி என்பது சினிமாவில் ஒரு அங்கமாகி விட்டது. எனவே நானும் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளேன். இப்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுப்பிரமணியபுரம் வந்து இத்தனை ஆண்டுகளில் நான் இரண்டு தமிழ்ப் படங்கள்தான் செய்தேன். எனக்கான வாய்ப்புகள் நிச்சயம் வரும்," என்றார்.

 

Post a Comment