இரண்டாம் திருமணம் என்ற யோசனையே எனக்கில்லை - பிரபுதேவா

|

No Thought Second Marriage Says Prabhu Deva

சென்னை: என் வாழ்க்கையில் இனி இரண்டாவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் குழந்தைகள், சினிமாதான் இனி எல்லாமே என்கிறார் நடிகர்- இயக்குநர் பிரபுதேவா.

நயன்தாராவுக்காக மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபுதேவா. ஆனால் மகன்களைப் பிரிய மனமின்றி நயன்தாராவைப் பிரிந்தார்.

இப்போது தன் முதல் மனைவியின் குழந்தைகளுடன் தனது பொழுதைக் கழிக்கிறார். அடுத்து மூன்று இந்திப் படங்களை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "மீண்டும் திருமணம் என்ற யோசனையே எனக்கு இல்லை. என் குழந்தைகள், என் சினிமாதான் இப்போது என் உலகம்.

என் குழந்தைகள் விடுமுறையில் இருக்கும்போது அவர்களுடன் நேரத்தை செலவிடுகிறேன்.

இப்போதைக்கு நுவ்வொஸ்தானன்டே... இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்திப் படங்களில் பணியாற்றுவதால் மும்பையில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறியுள்ளேன். ஆனால் நிச்சயம் சென்னைதான் என் இருப்பிட முகவரியாக இருக்கும்.

இந்தியில் படம் செய்வது பிடித்திருக்கிறது. காரணம் நிறைய பணம் முதலீடு செய்வதோடு, படப்பிடிப்பை துவங்கும் போதே ரிலீஸ் தேதியையும் அறிவித்து விடுகின்றனர். அந்த அளவு முழு ஈடுபாடு காட்டுவது எனக்குப் பிடித்திருக்கிறது," என்றார்.

 

Post a Comment