காரணம் அவரது கன்னி முயற்சியான கோச்சடையான். அதுவும் இந்தியாவின் ஆனானப்பட்ட இயக்குநர்களே தவம் கிடக்கும் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கியுள்ள அவரது முதல்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகப் போகிறது.
அந்த மகிழ்ச்சி மற்றும் பரபரப்புடன் தனது பிறந்த தினத்தை இன்று கொண்டாடினார் சௌந்தர்யா.
ஒரு கிராபிக் டிசைன் மேற்பார்வையாளராக தனது கேரியரைத் தொடங்கிய சௌந்தர்யா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன், எந்திரன் என ரஜினியின் படங்களில் கிராபிக் டிசைனராகப் பணியாற்றினார்.
அதே காலகட்டித்தில் ரஜினியை வைத்து அனிமேஷன் படமாக சுல்தான் - தி வாரியரைத் தொடங்கினார். ஆனால் பல காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
பின்னர் கோவா என்ற படத்தைத் தயாரித்த சௌந்தர்யா, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகுதான் கோச்சடையானுக்கு இயக்குநராக அறிவிக்கப்பட்டார்.
இந்தியாவின் முதல் பர்பார்மன்ஸ் கேப்சரிங் 3 டி படம் என்ற பெருமையுடன் வெளியாகவிருக்கும் கோச்சடையானின் படப்பிடிப்பை முடித்துவிட்ட சௌந்தர்யா, இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளார்.
வரும் டிசம்பர் 12 அல்லது 28-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு அதிக மொழிகள் மற்றும் அரங்குகளில் கோச்சடையானை வெளியிடவிருக்கிறார் சௌந்தர்யா.
Post a Comment