இது வதந்தியோ, உண்மையோ ஆனால் டிவி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நித்தியானந்தா ரியாலிட்டி ஷோ வான பிக் பாஸ் சீசன் 6 ல் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவைப் போல கலர்ஸ் டிவியில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தொடங்கப்பட்டது. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளன. நிகழ்ச்சி பற்றி சில சர்ச்சைகள் எழுந்தாலும் ஒரளவு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த நிலையில் சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் 6வது சீசன் அக்டோபர் 7ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீசனில்தான் நித்தியானந்த பங்கேற்க உள்ளதாக அவருடைய செய்தித்தொடர்பாளர் டாலே பக்வகர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் சுவாமியின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது!. ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.
ஆனால் இது குறித்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பங்கேற்பாளர்கள் பற்றி ரகசியமாக வைத்திருக்கப்படும். இல்லையென்றால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் போய்விடும் என்பதற்காக இவ்வாறு கடைபிடிக்கப்படுவதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனார்.
Post a Comment