பாலிவுட்டில் ஜோடி தேடும் விஜய்?

|

Vijay Starts Heroine Hunt Bollywood   

தனது அடுத்த படத்துக்கு ஜோடியாக பாலிவுட்டிலிருந்து நடிகை ஒருவரை இறக்குமதி செய்யும் முடிவிலிருக்கிறார் நடிகர் விஜய்.

துப்பாக்கி படத்துக்குப் பிறகு இயக்குநர் விஜய்யுடன் கைகோர்க்கிறார் நடிகர் விஜய்.

இந்தப் படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரை ஹீரோயினாக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் விஜய். இதற்காக தனது குரு ப்ரியதர்ஷன் உதவியை நாடியுள்ளார் அவர்.

தமிழில் தன் படம் மூலம் அறிமுகமாகி இன்று பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாகத் திகழும் ப்ரியங்கா சோப்ராவை அணுகுமாறு இயக்குநர் விஜய்க்கு நடிகர் விஜய் பரிந்துரைத்ததாகத் தெரிகிறது.

அவர் கிடைக்காதபட்சத்தில், தீபிகா படுகோன் உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் பேசவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கக் கூடும் என்றும், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்வார் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Post a Comment