கிச்சன் சூப்பர் ஸ்டாருக்கு ரூ.10 லட்சம் பரிசு

|

Kitchen Super Star On Vijay Tv

விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியான கிச்சன் சூப்பர் ஸ்டாரில் நன்றாக சமைத்து பட்டம் வெல்லும் பிரபலத்திற்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக கிடைக்க உள்ளது.

சமையல் நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு அதிகம் தான். உலகில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் யாராவது ஒருவர் எதையாவது சமைத்துக் கொண்டுதான் இருக்கிறார். பிரபலங்கள் சமைக்கும் சமையல் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகம் என்று தெரிந்து விஜய் டிவி புதியதாக கிச்சன் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அனைவருமே பிரபலங்கள்தான். திரைப்பட நடிகர் சிவா, இளவரசன், பிரியா, நேத்ரன், சின்னத்திரை நட்சத்திரங்கள் பூஜா, சந்தியா, ஆர்த்தி, நிஷா, ப்ரீத்தா ராகவ், ஜெ. லலிதாஅரவிந்த் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்குகின்றனர். இவர்களுடன் நடிகர் சுரேஷ் பங்குபெறுகிறார்.

இந்த சமையல் நிகழ்ச்சியில் உள்நாட்டு சமையல் மட்டுமல்லாது வெளிநாட்டு சமையலும் சமைக்க உள்ளனர் பிரபலபங்கள். ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த சமையல் நிகழ்ச்சிக்கு சஞ்சீவ் கபூர், செஃப் தாமோதர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று சிறந்த சமையல் வல்லுநர்களை தேர்ந்தெடுக்கின்றனர். இறுதிச்சுற்றில் வெற்றி பெற்று கிச்சன் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வெல்லப்போகும் பிரபலத்திற்கு 10 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும்.

ஞாயிறுதோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் புதிது புதிதாக சமைத்து அசத்தப்போகின்றனர் பிரபலங்கள் பார்த்து ரசியுங்களேன்.

 

Post a Comment