15 பெண்களுக்கு இலவச திருமணம் - ஏற்பாடு ரசிகர்கள்... நடத்தி வைப்பது விஜய்!

|

Vijay Conduct Free Marriage

à®"சூர்: 15 ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறார் நடிகர் விஜய். à®"சூர் நகர, à®'ன்றிய தலைமை இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தங்கள் மன்றத்தின் 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில், நடிகர் விஜய் கலந்து கொண்டு, 15 ஏழைப் பெண்களுக்கு, 51 சீர்வரிசைகள் வழங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

நாளை காலை 8 மணி முதல் 11 மணிவரை விழா நடக்கிறது. விஜய் மக்கள் இயக்க நிறுவனரும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்.

இயக்கத்தின் மற்ற நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். 15 ஏழை பெண்களுக்கு, சீர்வரிசைகளை வழங்கி திருமணத்தை நடத்துகிறார் விஜய்.

 

Post a Comment