மாற்றான்.... 21 நிமிடங்கள் கட்!

|

Maattrraan Trimmed 21 Minutes   

சூர்யா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த மாற்றான் படத்தின் நீளம் இப்போது 21 நிமிடங்கள் குறைத்து ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றான் படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் நிறைய வந்தன. மேலும் படம் மிக நீளமாக உள்ளதாகவும், இடைவேளைக்குப் பிறகு போரடிப்பதாகவும் ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டது.

படத்தின் நீளம் மொத்தம் 2 மணி 47 நிமிடங்கள். எனவே படத்தில் போரடிக்கும் காட்சிகளைத் தூக்கிவிட தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்தது.

அதன்படி 21 நிமிடக் காட்சிகள் வெட்டப்பட்டு படம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.

வசூல் எப்படி?

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படத்துக்கு வெகு சிறப்பான ஓபனிங் கிடைத்ததால், உலகம் முழுவதும் கடந்த மூன்று தினங்களில் மட்டும் ரூ 19 கோடியை மாற்றான் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவிலும் இதுவரை ரூ 2.86 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாம்.

விடுமுறை நாட்கள் அதிகம் உள்ளதாலும், படம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதாலும் இனி வசூல் அதிகரிக்கும் என்று தயாரிப்பாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

 

Post a Comment