வேலு நாயக்கருக்கு 25 வயதாகி விட்டது... கமல்ஹாசனுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்த நாயன் படத்தின் நாயகன்தான் இந்த வேலு நாயக்கர். நாயகன் படம் வெளியாகி 25 வருடங்களை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, அப்படத்தின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதம்:
நல்ல சினிமாவிற்கு தடைகள் நிறையவும் ஆதரவு கொஞ்சமும் இருக்கத்தான் செய்கிறது. எங்களின் கூட்டு முயற்சியின் வெற்றிக்கு வயது இருபத்தி ஐந்து என்று கூறியுள்ள கமல் சகாக்கள் மணிரத்னம், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், தோட்டாதரணி, பாலகுமாரன், புதுமைப்பித்தன், சரிகா ஆகியோரை நினைவு கூர்ந்துள்ளார்.
இதேபோல் முக்தா சீனிவாசன், திரு. ராமசாமி ஆகியோரையும் இந்த நேரத்தில் நினைக்காமல் இருக்கமுடியவில்லை என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கமல்.
நாயகன் படத்தை உலகறியச் செய்தவர்கள் ரசிகர்களே அவர்களுக்கு என்றென்றும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ள கமல், மணிரத்னதும் தானும் ரசிகர்களுக்காகவே தொடர்ந்து நல்ல சினிமா கொடுக்க முயற்சி செய்வதாக கூறியுள்ளார்.
கடல், விஸ்வரூபம் திரைப்படங்கள் வெற்றிபெற வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் கமல்.
Post a Comment