ஒரே கதையை 50 முறை சொன்ன இயக்குனர்

|

The director told me the same story 50 times

சென்னை: தயாரிப்பாளருக்கு ஒரே கதையை 50 முறை சொன்னார் இயக்குனர். நகுல், பூர்ணா நடித்த 'கந்தகோட்டை' படத்தை இயக்கியவர் சக்திவேல். இவர் இயக்கும் புதிய படம் 'ஈகோ'. இதுபற்றி அவர் கூறியதாவது: ஈஸ்வர் கோமதி என்ற இரு கதாபாத்திரங்களின் முதல் எழுத்தை சுருக்கித்தான் 'ஈகோ' என படத்துக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. புதுமுகங்கள் வேலு, அனஸ்வரா ஜோடி. நகைச்சுவை வேடத்தில் பால சரவணன் நடிக்கிறார். இரண்டு இளைஞர்கள் ஒரு குடும்பத்திடம் வசமாக சிக்கிவிடுகிறார்கள்.

அவர்களிடம் இருவரும் படும்பாட்டை நகைச்சுவையாக படம் சொல்கிறது. என் நண்பனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவமே இந்த கதை. இப்படத்தின் கதையை தயாரிப்பாளரிடம் கூறியபோது பல்வேறு குறுக்குகேள்விகள் கேட்டார். ஒவ்வொரு சீனுக்கும் லாஜிக் என்ன என்று விவரிக்க கூறினார். 50 முறை இக்கதையை அவரிடம் திரும்ப திரும்ப சொன்னேன். அதன் இறுதிவடிவம் ரசிக்கும் விதத்தில் அமைந்தது. ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவு. காஷ் வில்லன்ஸ் இசை. பெரியசாமி ரவிச்சந்திரன் தயாரிப்பு. இவ்வாறு இயக்குனர் சக்திவேல் கூறினார்.
 

Post a Comment