திருமணம், ரிசப்சன் முடிந்து ஒருவழியாக மீண்டும் சினிமா ஷூட்டிங்கிற்கு தயாராகிவிட்டார் கரீனா கபூர் நவம்பர் 5 முதல் அவர் ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சயீப் அலிகான் - கரீனா திருமணம்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊடகங்களின் ஹாட் டாபிக். எந்த ஒரு விழாவையும் விடாமல் கவர் செய்து வெளியிட்டனர்.
திருமணம், ரிசப்பன், தேனிலவு முடிந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு செல்ல தயாராகிவிட்டாராம் கரீனா. திருமணத்திற்கு முன்பே பேபு படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் மீதி காட்சியில் நடிக்கவேண்டியுள்ளது. ஃபெவிகால், தபாங் 2 ஆகிய படங்களில் நடிக்கவும் கரீனா கையெழுத்திட்டிருக்கிறார். அதற்கான ஷூட்டிங்கில் நவம்பர் 5 ம் தேதி முதல் பங்கேற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ஃபெவிகால், தபாங் 2 படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடுகிறார் கரீனா. தபாங் 2 படத்தில் ஐட்டம் பாடலில் ஆட கரீனா ஒத்துக்கொண்டதற்காக பி.எம்.டபுள்யூ கார் ஒன்றினை சல்மான்கான் பரிசளித்தார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
Post a Comment