"துப்பாக்கி" ஒரு ஃபுல் மிலிட்டரி மீல்ஸ்

|

Thuppakki is good treat all for fans

மொழி தெரியாத நடிகைகளிடம் தமிழ் வசனம் பேச வைப்பது கடினம் என்றார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய், காஜல் அகர் வால் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது: உதவி இயக்குனராக பணியாற்றிய நேரத்திலேயே விஜய் படத்தை இயக்குவது பற்றி அவரிடம் பேசி வந்தேன். அந்த வாய்ப்பு இப்போதுதான் அமைந்திருக்கிறது. விஜய்யின் இமேஜ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரிடம் பணியாற்றியபோது அவரது டைமிங் வசனம், காட்சியை மெருக்கேற்றும்விதம் பிடித்திருந்தது.

இதில் இந்தி, ஆங்கில வசனங்களும் பேசி இருக்கிறார். வடநாட்டுக்காரர்கள் பேசுவதுபோல் அவர் இந்தி பேசியபோது அவரை வைத்து இந்தி படம் இயக்க வேண்டும் என்ற ஆசை தோன்றி இருக்கிறது. அது நிறைவேறும் என்று எண்ணுகிறேன். இப்படத்தில் 6 வருஷத்துக்கு பிறகு சொந்த குரலில் பாடி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு மிலிட்டரி மீல்ஸ் போல் இருக்கும். அவரது படங்களில் வருவதுபோல் தத்துவ பாட்டு எதுவும் இதில் கிடையாது. நடிகைகளை பொறுத்தவரை, மொழி தெரியாத ஹீரோயின்களிடம் தமிழ் வசனம் பேச வைப்பது கடினம்.

பேசுகிற வரை பேசட்டும் டப்பிங்கில் வேறு ஆளை பேச வைத்துகொள்ளலாம் என்று விட்டுவிடுவேன்.  தமிழ் தெரியாவிட்டாலும் இதில் காஜல் அந்த கஷ்டத்தை தரவில்லை. மனப்பாடம் செய்து வசனம் பேசினார். தீபாவளிக்கு 3 நாள் முன்பாகவே இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளோம். இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.
 

Post a Comment