மனீஷா கொய்ராலாவும் அரசியலில் குதிக்கிறார்

|

Manisha Koirala May Enter Nepal Politics

சினிமா நட்சத்திரங்களுக்கு திரைப்பட வாய்ப்பு குறைந்த உடன் அவர்களின் கவனம் சின்னத்திரை இல்லை என்றால் அரசியல் பக்கம் திரும்பும். பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த மொழி நடிகர், நடிகையர்களும் இதற்கு விதிவிலக்கில்லை.

இப்போது புதிதாக மனிஷா கொய்ராலாவும் அரசியல் பிரவேசம் செய்யப்போகிறாராம். அவரது லட்சியம் இந்திய அரசியல் அல்ல நேபாள அரசியல்தானாம்.

நேபாளத்தின் காட்மண்டுவில் பிறந்த மனீஷா தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, நேபாளி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நேபாளத்திற்கு சென்று வருகிறார். அவருடைய தாத்தா பிஸ்வேஸ்வர் பிரசாத் கொய்ராலாவும், இரண்டு மாமன்களும் நேபாளத்தில் ஏற்கனவே பிரதமர்களாக இருந்துள்ளனர். இதனால் தாய்நாட்டின் மீது பற்று அதிகரித்து நேபாளத்தில் அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக கூறியுள்ளார்.

 

Post a Comment