செவ்வாய்க்கிழமை பாண்டியராஜன் இயக்கத்திலும், இளையராஜாவின் இசையிலும் ஹிட்டடித்த கன்னிராசி ஒளிபரப்பாகிறது. இதில் பிரபு, ரேவதி ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். காமெடிக்காகவும், கதைக்காகவும், பாடலுக்காகவும் ஓடிய படம் இது.
புதன்கிழமையன்று விஜயகாந்த், ரஞ்சிதா நடிப்பில் வெளியான பெரியமருது ஒளிபரப்பாகிறது. பாடல்களுக்காகவும், சண்டைக் காட்சிகளுக்காகவும் பேசப்பட்ட படம் இது.
வியாழக்கிழமை இரவு பிரபு, கனகா உள்ளிட்டோர் நடித்த பெரிய குடும்பம் வெளியாகிறது.
வெள்ளிக்கிழமையன்று சுந்தர்.சி, நமீதா, நதியா ஆகியோரது நடிப்பிலும், விவேக்கின் காமெடியிலும் உருவான சண்டை ஒளிபரப்பப்படுகிறது.
'முறைமாமன்'களைத் தரிசிக்க மக்களே தயாராகிக்கோங்க...!
Post a Comment