கமலின் விருந்து ரெடி

|

Vishwaroopam has length of 148 minutes and 23 seconds

அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆவதால் விஸ்வரூபம் பட ரிலீசை கமல்ஹாசன் தள்ளிப்போனதாக கூறப்பட்ட நிலையில், படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. கமல்ஹாசன், ஆண்ட்ரியா நடித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தை கமலே எழுதி இயக்கியுள்ளார். இப்பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிந்துவிட்டது. கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ந் தேதி அன்று பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது. இந்நிலையில், அதே சமயம் இந்தி பதிப்பிற்கு ஏ சான்றிதழ் வழங்கியது. இதனையடுத்து, 'விஸ்வரூபம்' படக் குழுவினர் இந்தி பதிப்பிற்கும் யூ/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் கேட்டதாக தெரிகிறது. படக்குழு கேட்டுக் கொண்டதால், மீண்டும் தணிக்கை செய்து, சில சீன்களை கட் செய்து யூ/ஏ சான்றிதழ் வழங்கியது. 'விஸ்வரூபம்' படத்தின் நீளம் சுமார் இரண்டரை மணி நேரம் அதாவது 148 நிமிடம் 23 நொடிகள். ஆக மொத்தம் கமலின் விருந்து ரெடி.
 

Post a Comment