கோபிநாத் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் கோபிநாத் தயாரிக்கும் படம் 'தேரடி வீதி திருக்கண்ணபுரம்'. பாபு.கே.விஸ்வநாத் இயக்குகிறார். இதில் சர்வானந்த் ஹீரோ. அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். ஷாம் டி.ராஜ் இசை அமைக்கிறார். படம் பற்றி கோபிநாத் கூறியதாவது: இயக்குனர் பாபு.கே.விஸ்வநாத்தும் நானும் பத்திரிகையில் ஒன்றாக பணியாற்றினோம். இருவரும் 20 ஆண்டுகால நண்பர்கள். நான் படம் தயாரிக்கும் ஆசையில் இருந்தேன். அவர், இயக்கும் ஆசையில் இருந்தார். அவர் சொன்ன கதை பிடித்திருந்ததால் நானே தயாரித்து ஒளிப்பதிவு செய்கிறேன். தஞ்சை மண்சார்ந்த கதை என்பதால் அந்த முகச்சாயல் கொண்ட சர்வானந்தை ஹீரோவாக நடிக்க கேட்டோம். அவரும் ஒப்புக் கொண்டார். ராதிகா ஆப்தே எனக்கு அறிமுகமானவர் என்பதால் அவரும் ஒப்புக் கொண்டார். பாடல் பதிவுகள் முடிந்திருக்கிறது. விரைவில் கும்பகோணம் பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது. காதல், காமெடி, சென்டிமென்ட் நிறைந்த கதை. இவ்வாறு கோபிநாத் கூறினார்.
Post a Comment