'மைனா' ஹிட்டுக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கி உள்ள படம் 'கும்கி'. பிரபு மகன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஜோடியாக நடித்து உள்ளனர். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவியும் இணைந்து தயாரித்துள்ளது. இமான் இசை. யுகபாரதி பாடல்கள். சுகுமார் ஒளிப்பதிவு. இதன் பாடல் வெளியீட்டு விழாவுக்கு பிறகு படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உண்டு. இதனையடுத்து இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்தது. ஆனால், துப்பாக்கி, போடா போடி போன்ற படங்கள் வெளியாகுவதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையை இயக்குனர் பிரபு சாலமனும், தயாரிப்பாளர் லிங்குசாமியும் மறுத்துள்ளனர். திட்டமிட்டபடி தீபாவளியன்று கும்கி ரிலீஸ் ஆகும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
Post a Comment