சென்னை: மைக் மோகன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட நடிகர் மோகன் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.
ஒரு காலத்தில் சில்வர் ஜூப்ளி படங்களாகக் கொடுத்துக் குவித்தவர் மோகன். இவரது படங்களுக்கு பெரிய மவுசு இருந்தது. காரணம், இவரது படங்களின் கதை உள்ளிட்டவை மட்டும் காரணமல்ல, மாறாக இசைஞானி இளையராஜாவின் இன்னிசையும்தான்.
இளையராஜாவின் இசையும், மோகனும் இருந்தால் அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது அக்காலத்தில் எழுதப்படாத விதியாகவே இருந்தது. பயணங்கல் முடிவதில்லை. உதயகீதம், மெளன ராகம் என சொல்லிக் கொண்டே போகலாம் இவர்களின் ஹிட் படங்களை.
இந்த நிலையில் தற்போது மோகன் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். கூடவே மீண்டும் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார். 2 பெயரிடப்படாத படங்களில் நடித்து வரும் மோகன் ஒரு படத்தைத் தயாரிக்கவும் போகிறார். தனது தயாரிப்பில் உருவாகப் போகும் முதல் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் உருவாக்கிறார் மோகன். மோகனின் தாய்மொழி கன்னடம் என்பதால் தனது முதல் தயாரிப்பை கன்னடத்திலும் பதிவு செய்கிறார்.
மலையாளத்தில் வெளியான பியூட்டிபுல் என்ற படத்தைத்தான் தனது முதல் தயாரிப்புக்கு எடுத்துக் கொள்கிறார். மலையாளத்தில் ஜெயசூர்யா, அனூப் மோகன், மேகனா ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழில் முற்றிலும் வேறுபட்ட நட்சத்திரங்களைப் போட்டு எடுக்கத் திட்டமிட்டுள்ளார் மோகன்.
Post a Comment