விவேகானந்தரை அவமதிப்பதா... சூர்யாவின் மாற்றான் படத்துக்கு எதிர்ப்பு

|


Youths Agitate Against Maatran Movie   
திருச்சி: விவேகானந்தரை அவமதிக்கும் வகையில் காட்சி அமைந்துள்ளதாக கூறி சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள மாற்றான் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சியில் இந்திய இளைஞர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ள படம் மாற்றான். இப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் திரையிடப்பட்ட நாளிலேயே சேலத்தில் தியேட்டர் மேற்கூரை இடிந்து விழுந்து பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், திருச்சியில் மாற்றான் படத்துக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.

மாற்றான் படத்தில் சுவாமி விவேகானந்தரை அவமதிக்கும் வகையில் காட்சி அமைந்துள்ளதாக கூறி இந்திய இளைஞர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாற்றான் படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தி பின்னர் விடுவித்தனர்.
 

Post a Comment