லோட்டஸ் செய்திச் சேனல் இன்று காலை முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘லோட்டஸ் டிவி' இன்று முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. கோவையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாதா அமிர்தானந்தாமாயி அவர்களின் சிஷ்யை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
உண்மை மலரட்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்கியுள்ள லோட்டஸ் சேனலில் செய்திகளுடன் பல்வேறு இளைஞர்களையும், ஆன்மீக ரசிகர்களையும் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன் முதலாக டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் செய்திகள் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளன. ஒரே நேரத்தில் 5 செய்திவாசிப்பாளர்கள் எக்ஸ்க்ளூசிவ் செய்திகளை செய்திகளை வாசித்தது புதுமையாக அமைந்திருந்தது.
இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்திக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை www.lotusnews.tv இணையத்தளத்தில் உடனுக்குடன் கண்டு ரசிக்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் ஒவ்வொருவரும் தங்களுக்கு என சேனலை தொடங்கியுள்ளனர். அதிமுகவிற்கு ஜெயா டிவி, திமுகவிற்கு கலைஞர் டிவி, தேமுதிகவிற்கு கேப்டன் டிவி என மதிமுகவிற்கு இமயம் டிவி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு புதிய தலைமுறை என ஆதரவு தொலைக்காட்சிகள் உள்ளன. தற்போது பாஜகவிற்கும் லோட்டஸ் டிவி தொடங்கப்பட்டுள்ளது.
Post a Comment