ஹாலிவுட் நடிகை கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ்க்கு இந்திய உணவை ருசிக்க வேண்டும் என்று சமீபகாலமாக ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதாம்.
இந்திய உணவின் சுவையும் மணமும் உலக அளவில் புகழ் பெற்றவை. இட்லி சாம்பார் என்றாலும் சரி அசைவ உணவுகள் என்றாலும் சரி அதன் சுவைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
பாலிவுட் நடிகை கிறிஸ்டினா ஹெண்டிரிக்ஸ்சும் இந்திய உணவின் சுவைக்கு அடிமையாகிவிட்டார் போல. இந்திய உணவுகள் மீது சமீப காலமாக அதிக ஆர்வம் ஏற்பட்டு வருகிறதாம் அவருக்கு. இங்கிலாந்தைச் சேர்ந்தவரான இவர் பிர்மிங்காம் நகரில் உள்ள பல்டி டிரையாங்கில் என்ற இந்திய உணவகத்திற்குப் போய் இந்திய உணவுகளை ஒரு கை பார்க்கத் திட்டமிட்டுள்ளாராம்.
"எனக்கு இந்திய உணவுகள் என்றால் ரொம்பப் பிரியம். ஆனால் இதுவரை இந்திய உணவுகளை சாப்பிட வாய்ப்பு கிடைக்கவில்லை.லண்டனுக்கு வருவதற்கு முன்பு நான் சிறு நகரங்களில் வசித்ததால் இந்திய உணவுகளை சாப்பிடும் வாய்ப்பு கிட்டவில்லை. லண்டனுக்கு வந்த பிறகுதான் நிறைய இந்திய உணவகங்கள் குறித்து எனக்குத் தெரிய வந்தது. லாஸ் ஏஞ்செலஸில் கூட நல்ல இந்திய உணவகம் இல்லை. பல்டி டிரையாங்கில் குறித்து கேள்விப்பட்டேன். அங்கு போய் சாப்பிட ஆர்வமாக உள்ளேன்" என்று கிறிஸ்டினா கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் டாம் குரூஸ் ஒருமுறை இந்திய உணவான சிக்கன் டிக்காவின் சுவை குறித்து கிலாகித்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment