சசிகுமார் இயக்கத்தில் சூர்யா

|

Sasikumar ready to direct suriya

சசிகுமார் இயக்கும் படத்தில் அடுத்த ஆண்டு நடிக்க உள்ளார் சூர்யா. சிங்கம் 2 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து லிங்குசாமி இயக்கும் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இதற்கிடையே வெங்கட் பிரபு சூர்யாவிடம் ஒரு கதையை சொன்னார். ஆனால் அந்த கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தனது படத்துக்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் சசிகுமார். சுந்தரபாண்டியன் படத்துக்கு பின் சசிகுமார் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதை மற்றொரு இயக்குனர் இயக்குகிறார். இதில் நடித்தபடியே தனது படத்துக்கான கதை விவாதத்திலும் சசிகுமார் ஈடுபடுகிறார்.

சசிகுமார் இயக்கும் படத்தில் அவர் நடிக்கவில்லையாம். இதில் ஹீரோவாக சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது. சமீபத்தில் சூர்யாவை சந்தித்து சசிகுமார் பேசியிருக்கிறார். அப்போது அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதத்தில் இருவரும் சேர்ந்து பணியாற்றுவது குறித்து பேசியுள்ளனர். தொடர்ந்து கமர்ஷியல் படங்களிலே சூர்யா நடித்து வருகிறார். அதிலிருந்து மாற்றமாக, பாலா பணியிலான ஒரு படத்தில் நடிக்க அவர் விரும்பினார். அதே நேரம் அந்த படத்தை 6 மாதங்களுக்குள் முடிக்கும் இயக்குனர் தேவை என்றும் சூர்யா விருப்பம் தெரிவித்திருந்தாராம். இதையடுத்துதான் சூர்யா-சசிகுமார் மீட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது.
 

Post a Comment