சென்னை: ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்ததாக சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா படத்தயாரிப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த வசந்தகுமார்என்பவர், கியூ பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது : சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சூடாமணி என்பவர், ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச்சென்று, வேலை வாங்கி தருவதாக கூறினார். இதற்காக அவர் ரூ.1.20 லட்சம் பணம் வாங்கினார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து போகவில்லை. அதற்காக வாங்கிய பணத்தையும் திருப்பித்தரவில்லை என்று தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கூறி இருந்தார்.
இதுதொடர்பாக ராமநாதபுரம் கியூபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் குற்றம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து ஞாயிறன்று போலீசார் சூடாமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்த 10 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான சூடாமணி இலங்கை தமிழர் ஆவார். வளசரவாக்கத்தில் சினிமா படக்கம்பெனி நடத்தி வந்தார். அகோரம் என்ற பெயரில் சினிமா படம் எடுத்துள்ளார் இவரது அண்ணன் ஈழ நேருவும், இதேபோல மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment