விஜய் டிவியின் ‘தர்மயுத்தம்’ நேரம் மாற்றம்

|

Dharmayutham Time Changed On Vijay Tv

விஜய் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘தர்மயுத்தம்' நெடுந்தொடர் திங்கட்கிழமை முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.

திரைப்பட நடிகர்கள் அப்பாஸ், கார்த்திக்குமார், அனுஜா ஐயர், நடித்துள்ள தர்மயுத்தம் தொடர் கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது.

இரவு 10மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடருக்கு நேயர்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதை அடுத்து அதற்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் இரவு 10மணியில் இருந்து இரவு 7.30 மணிக்கு தர்மயுத்தம் தொடரின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

நாதஸ்வரத்திற்கு போட்டி

சன் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு கார்த்திகைப் பெண்கள் தொடர் ஒளிபரப்பாகிறது. இது தர்மயுத்தம் தொடருக்கு போட்டியாக அமைந்திருந்தது. அதேபோல் இரவு 7.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் நாதஸ்வரம் தொடர் ஒளிபரப்பாகிறது. இதுவும் திரு புரெடெக்சன் திருமுருகன் இயக்கி நடித்துள்ள தொடர்தான். இதுவும் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றுள்ள ஒரு தொடர் என்பதால் இனி தர்மயுத்தம், நாதஸ்வரம் தொடர்களிடையே கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.

 

Post a Comment