ப்ரிட்ஜ், சைக்கிள், டிவி .. அசத்தும் சன் எக்ஸ்பிரஸ்!

|

Sun Express Reality Show Gives Sweet

சன் டிவியில் à®'ளிபரப்பாகும் சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு எதிர்பாராத பரிசுகளை கொடுத்து அசத்துகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சி பிரபலமாகத் தொடங்கியுள்ளது.

நம் வீட்டில் ரிப்பேராக உள்ள பழைய பொருட்களை மாற்றவேண்டுமா? கடை கடையாக ஏறி அதை எக்சேஞ்ச் ஆபரில் மாற்றிக்கொண்டு வருவோம். ஆனால் சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும் அவர்களே நம் வீடு தேடி வந்து நமக்கும் தேவையான பொருட்களை இலவசமாக கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். பொருளை வாங்குபவர்கள் செய்யவேண்டியது à®'ன்றே à®'ன்றுதான். சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சிச் தொகுப்பாளர் தீபக் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் போதும் அவர்களுக்கான பொருள் பரிசாக கிடைத்துவிடும்.

இந்த வாரம் சன் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சிக்காக தீபக் சென்றது வேலூர். வேலூர் கல்லூரி மாணவர்களிடம் விளையாடிய தீபக் ஸ்மார்ட் போனை வைத்து எக்ஸ்பிரஸ் ரவுண்டை விளையாடினார். தீபக் கேட்ட மூன்று கேள்விகளில் இரண்டு கேள்விக்கு சரியான பதிலை கூறி ஸ்மார்ட் போனை ஜெயித்தார் மாணவர் கதிரவன்.

அதேபோல் வேலூரைச் சேர்ந்த சலீம் பாஷா வீட்டிற்கு சென்றது சன் எக்ஸ்ப்ரஸ். தீபக், முதலில் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லி ஃப்ரிட்ஜ், சைக்கிளை பரிசாக பெற்றார். அதேபோல் மற்றொரு குடும்பத் தலைவி சரியான பதிலைச் சொல்லி எல்.சி.டி கலர்டிவியை பரிசாக பெற்றார். ஆனால், மற்றொரு கேள்விக்கு தவறான பதிலை கூறியதால் ஏ.சி. மெசினை திரும்ப எடுத்துச் சென்றுவிட்டனர்.

அது சரி தீபக் பின்னாடி நிற்கிற பீம்பாய்கள் ஏன் சிரிக்கவே மாட்டேங்கிறாங்க. ஜோக் அடிச்சா கூட சிரிக்க கூடாதுன்னு நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சொல்லியிருக்காங்களா என்ன?

வாரந்தோறும் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு à®'ளிபரப்பாகும் சன் எக்ஸ்ப்ரஸ் நிச்சயம் à®'ரு மாற்றத்தை தரும் நிகழ்ச்சிதான் என்கின்றனர் ரசிகர்கள்.

 

Post a Comment