பாகன் பட இயக்குநரின் அடுத்த படம் 'முஸ்தபா'...!

|

After Paagan Director Aslam Direct Mustafa

ஸ்ரீகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பாகன் பட இயக்குநர் அஸ்லமுக்கு, அடுத்து பெரிய பட வாய்ப்பு வந்துள்ளது.

இந்த முறை தமிழின் முதல்நிலை நடிகர்களுள் à®'ருவரை ஹீரோவாக வைத்து படத்தை இயக்குகிறார் அஸ்லம். இந்தப் படத்துக்கு முஸ்தபா என்று தலைப்பு வைத்துள்ளார்.

முஸ்தபா படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படுகிறது.

முதல் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் வரை 'சிரிப்பு சிரிப்பு சிரிப்பைத் தவிர வேறில்லை' என்று சொல்லும் வகையில் வயிற்றைப் பதம்பார்க்கும் காமெடியாக முஸ்தபா திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம் அஸ்லம்.

சுந்தர் சிக்கு எப்படி உள்ளத்தை அள்ளித்தா படம் அமைந்ததோ, அதற்கு நிகராக இந்த முஸ்தபா இருக்கும் என்கிறார் இயக்குநர் அஸ்லம், மிகுந்த நம்பிக்கையுடன்!

 

Post a Comment