ஜெயா டிவியில் புதிய கேம் ஷோ ஹவுஸ்புல்!

|

House Full Game Show On Jaya Tv

எஸ்.எம்.எஸ் மூலம் விளையாடும் "ஹவுஸ்புல்'' என்ற புதிய கேம்ஷோ ஜெயாடிவியில் ஒளிபரப்பாகிறது.

தமிழகம் மட்டுமின்றி உலக மக்கள் யாவரும் பயன் பெறும் வகையில் நேரடியாக ஒளிபரப்பாகும் இந்த கேம்ஷோவில் வீட்டிலிருந்தபடியே முற்றிலும் எஸ்.எம்.எஸ். முறையை பயன்படுத்தி விளையாடலாம்.

நேயர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜெயா டிவியின் நிகழ்ச்சிகளுக்கிடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில்களை எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்ப வேண்டும். அதைத்தொடர்ந்து "ஹவுஸ்புல்'' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 15 எண்களை கொண்ட ஒரு குறுந்தகவல் பட்டியல் அவர்களது செல்போனுக்கு அனுப்பப்படும். இந்த எண்களை வைத்து இந்நிகழ்ச்சியில் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலமாக பங்கேற்கலாம்.

இதில் ஒரு கோடி ரூபாய் வரை பரிசுகள் வெல்ல வாய்ப்பு உள்ளது. முதல் இடத்தைப் பிடிக்கும் வெற்றியாளருக்கு ஒரு கோடி மதிப்பிலான வீடு பரிசாக காத்திருக்கிறது. இந்த சுவாரஸ்யமான புத்தம் புது நிகழ்ச்சி திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

 

Post a Comment