விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி தலைப்புக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒத்திப் போவது இத்துடன் 9வது முறையாகும்.
கள்ளத்துப்பாக்கி என்ற படத்தைத் தயாரிக்கும் ரவி தேவன் என்பவர், துப்பாக்கி படத் தலைப்புக்கு தடைகோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னை சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு பல்வேறு காரணங்களுக்காக பல முறை ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
இப்போது 9வது முறையாக இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.
இதுவரை தமிழ் சினிமா தொடர்பான வழக்கு ஒன்று இத்தனை முறை ஒத்திவைக்கப்பட்டதே இல்லை எனும் அளவுக்கு இழுத்துக் கொண்டு போகிறது இந்த வழக்கு. இதனால் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள துப்பாக்கியின் விளம்பர பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன.
அடுத்து வரும் 5-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
Post a Comment