பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடிக்கயிருக்கும் படம் 'பட்டத்து யானை'. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா நடிக்க கூடும் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. 21 வயதாகும் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவும் நடிக்க ஆசை இருப்பதாக தெரிகிறது. பூபதி பாண்டியன் சார்பில் ஐஸ்வர்யாவிடம் நடிக்க கேட்டதற்கு அப்பாவிடம் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டாராம். இந்நிலையில், தற்அபாது 'வனயுத்தம்' படத்தில் படு பிசியாக இருக்கும் அர்ஜூன், இன்னும் இரு தினங்களில் வீடு திரும்புகிறார். அப்போது தான் ஐஸ்வர்யா நடிக்க வருவாரா என்பது தெரிய வரும்.
Post a Comment