லாஸ் ஏஞ்சலெஸ்: ஸ்கேரி மூவி 5 என்ற படத்தில் நடித்து வரும் லின்ட்சே லோஹன், படப்பிடிப்புக்காக கொடுக்கப்பட்ட ரூ. 8 லட்சம் மதிப்புள்ள உடைகளை அப்படியே லவட்டிக் கொண்டு போய் விட்டாராம்.
இந்த உடைகளைப் போட்டுத்தான் அவர் அப்படத்தில் நடித்து வந்தார். அவற்றை ஒரு ஷெல்ப்பில் போட்டு வைத்திருந்தனர். ஆனால் அந்த உடைகளை அப்படியே எடுத்துக் கொண்டு போய் விட்டாராம் லோஹன்.
கடந்த மாதம் இந்தக் கூத்து நடந்ததாம். அழகான டாப்ஸ்கள் மற்றும் ஸ்கர்ட்களை லோஹன் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. லோஹனின் இந்த டிரஸ் திருட்டுதான் ஸ்டுடியோ முழுக்கப் பேச்சாக இருந்ததாம்.
இதுகுறித்து ஸ்டுடியோக்காரர் ஒருவர் கூறுகையில், ஹோட்டலுக்குப் போகும் அங்கு குளிக்க சோப்பு கொடுப்பார்கள். ஆனால் அதை பயன்படுத்தி விட்டு அங்கேயே போட்டு விட்டு வந்து விட வேண்டும். அதைத் தூக்கிக் கொண்டு வர நினைக்கக் கூடாது. அதேபோலத்தான் செட் பிராப்பர்ட்டியும். அதை பயன்படுத்தி விட்டு கொடுத்து விட வேண்டும். ஆனால் லோஹன் அப்படி நினைக்கவில்லை என்றார் கிண்டலாக.
ஆனால் லோஹன் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று அவரது மேலாளர் விளக்கியுள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு நகைக் கடை ஒன்றில் நெக்லஸ் ஒன்றை லோஹன் திருடி கையும் களவுமாக பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment