தேசிய விருது உள்பட ஏராளமான விருதுகளை இந்தப் படம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்றுள்ளது. நார்வே திரைப்பட விழாவில் 7 விருதுகளை அள்ளியது இந்தப் படம். இப்போது இந்தியன் பனோரமாவுக்கு தேர்வாகியுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் சற்குணம் கூறுகையில், 'இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வாவது சாதாரண விஷயமல்ல. காரணம் தேசிய விருதுக்கு அடுத்தபடியான பெருமை இந்தப் பிரிவுக்கு உண்டு.
மலையாளத்தில் 5 படங்களும், மராத்தி, பெங்காலியில் தலா 3 படங்களும் ஆக மொத்தம் 20 படங்கள் இந்தப் பிரிவுக்கு தேர்வாகி உள்ளன. இதில் தமிழில் இருந்து தேர்வான ஒரே படம் 'வாகை சூடவா' என்பது பெருமையாக உள்ளது.