அமிதாப்பச்சனுக்கு சிறந்த டிவி நிகழ்ச்சிச் தொகுப்பாளர் விருது

|

Amitabh Bachchan Receives Best Tv Award Kbc

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அமிதாப்பச்சனுக்கு சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது கிடைத்துள்ளது.

சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் யார் என்று கலர்ஸ் டிவி மக்களிடம் à®"ட்டெடுப்பு நடத்தியது. இதில் பெருவாரியான மக்கள் சோனி டிவியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தும் அமிதாப் பச்சனை சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

கோன் பனேகா குரோர்பதி சீசன் 1 நிகழ்ச்சி கடந்த 2000மாவது ஆண்டு à®'ளிபரப்பானது இதுவரை 5 சீசன் முடிந்து 6 சீசன் கடந்த சில மாதங்களாக à®'ளிபரப்பாகிவருகிறது. 6ல் 5 சீசன் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கியுள்ளார். சீசன் 3 மட்டும் நடிகர் ஷாருக்கான் தொகுத்து வழங்கினார்.

நன்றி கூறிய அமிதாப் சிறந்த டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக தன்னை தேர்ந்தெடுத்த ரசிகர்களுக்கு அமிதாப்பச்சன் டிவிட்டரில் நன்றி கூறியுள்ளார். தனக்கு à®"ட்டளித்து தேர்வு செய்த ரசிகர்களுக்கு நன்றி என்று அவர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

வயசானலும் ‘பிக் பி' தான் இன்னமும் சூப்பர் ஸ்டார்தான் என்று நிருபித்து வருகிறார்.

 

Post a Comment