சென்னை: துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு எதிராக தாங்கள் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டாலும்கூட, படத்துக்கான நெருக்கடியை குறைப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது 'கள்ளத்துப்பாக்கி'காரர்கள்!
தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் விஜய்யின் துப்பாக்கி படத்துடன் களத்தில் மோதுகிறது கள்ளத்துப்பாக்கி.
விக்கி, விஜித், பிரபாகரன், எஸ்பி தமிழ்ச்செல்வன், குட்டி ஆனந்த் ஹீரோக்களாகவும், ஷாவந்திகா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
லோகியாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை கேசி ரவிதேவனும், சிஎஸ் முருகேசனும் தயாரித்துள்ளனர். ரவிதேவன் கமல்ஹாஸனிடம் பணியாற்றியவர்.
128 நாட்களில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்த்து கமல்ஹாஸன் பாராட்டியிருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர்.
தீபாவளி ரேஸில் பிரமாண்டமாய், நட்சத்திர அந்தஸ்துடன் வெளிவரும் துப்பாக்கியை, புதியவர்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளத்துப்பாக்கி எதிர்கொள்கிறது.
இந்தப் படங்கள் தவிர, அலெக்ஸ் பாண்டியன், கும்கி, போடா போடி போன்றவையும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment