சென்னை: ஸாரி டீச்சர் என்ற பெயரில் தெலுங்கு, இந்தி, தமிழில் உருவாகியுள்ள படத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஆசிரியர்கள், இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸாரி டீச்சர் என்ற பெயரில் ஸ்ரீசத்யா என்ற தெலுங்கு இயக்குநர் பலான படம் ஒன்றை எடுத்துள்ளார். இதில் ஆர்யமான், காவ்யா சிங் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இதில் டீச்சராக வருகிறாராம் காவ்யா சிங். ஆனால் படு ஆபாசமாக உடை அணிந்து அலங்கோலமாக நடித்துள்ளார் காவ்யா சிங். இதனால் ஆந்திராவில் இந்தப் படத்துக்கு ஆசிரியர்களிடையே கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திலும், சென்சார் போர்டிலும் ஆசிரியர்கள் புகார் கொடுத்துள்ளனர். இப்படத்தை தடை செய்ய வேண்டும், படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். முதலில் இந்தப் படத்துக்கு ஐ லவ் யூ டீச்சர் என்று குசும்புத்தனமாக பெயர் வைத்திருந்தனர். இப்போது அதை விட மகா குறும்புத்தனமாக ஸாரி டீச்சர் என்று வைத்துள்ளனர்.
இது ஒரு ரொமான்டிக் திரில்லர் படமாம். ஆசிரியைக்கும், மாணவருக்கும் இடையே ஏற்படும் காதல் கதையாம். ஆனால் படம் முழுக்க ஆபாசத்தை வாரியிறைத்துள்ளது அதன் புகைப்படங்களைப் பார்த்தாலே தெரிகிறது. மேலும் இந்தப் படத்தின் ஸ்டில்கள் இன்டர்நெட்டில் படு வேகமாக பரவி வருகின்றன.
ஆனால் ஆசிரியைகளை மிகவும் தரக்குறைவாக மாணவர்கள் பார்க்கும் நிலைக்கு இந்தப் படம் தள்ளி விடும், மிகவும் மோசமான முறையில் ஆசிரிய சமுதாயத்தை இயக்குநர் சித்தரித்துள்ளார். இது கேவலமான செயல் என்று ஆந்திர மாநில ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தெலுங்கு, இந்திப் பதிப்பின் பாடல்களை வெளியிட்டு விட்டநிலையில் இன்று தமிழ்ப் பதிப்பின் ஆடியோவை வெளியிடுகின்றனர் இப்படத்தின் தயாரிப்பாளர்கள்.
Post a Comment