நடமாடும் கவர்ச்சிப் புயலாக வலம் வரும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், அடுத்து ‘தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகத்தை தேடி மும்பை நகரில் வலம் வருகிறார். தன்னுடைய ஒரிஜினல் முகத்தோடு வந்தால் ரசிகர்கள் கூட்டம் கூடிவிடும் என்று பர்தா போட்டு கவர் செய்து மும்பை நகரை சுற்றி வருகிறாராம் வீணா மாலிக்.
இது மிகப்பெரிய சாதனைப் படம். எனவே இதில் நடிப்பது சவாலான விசயம். அமிதாப் பச்சன், அமீர்கான், சல்மான்கான், ஷாருக் கான், போனற் நடிகர்கள் திரைப்படங்களில் தங்களுக்கு என ஒரு கதாபாத்திரங்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கின்றனர். அதேபோல் நானும் சிறந்த நடிகையாக பெயரெடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் இந்த கவர்ச்சி நாயகி.
கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது
வீணாவின் டிராமா க்வீன் ஆல்பம் ஏற்கனவே இசைத்தட்டு விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இசை அலையுடன் கவர்ச்சி அலையுடன் சேர்த்துக் கலக்கி இதில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் வீணா. தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் வீணா மாலிக்குடன் பூஜா மிஸ்ராவும் இணைந்துள்ளார். இதனால் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்களிடையே பேச்சு எழுந்துள்ளது.
கின்னஸ் சாதனப் படம்
தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் திரைப்படம் 20 கின்னஸ் சாதனைகளை முறியடிக்கும் வகையில் எடுக்கப்படவுள்ளதாம். ஹரூன் ரஷீத் இயக்கும் இப்படத்தை சதீஷ் ரெட்டி தயாரிக்கிறார். இதில் ஹாலிவுட் நடிகர் ஜெரிமி மார் வில்லியம்ஸ் உடன் நடிக்கிறார்.
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவரும் வகையில் இங்கிலாந்து, பாகிஸ்தான், உக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா, ஆகியா நாடுகளின் கூட்டுத்தயாரிப்பில் இந்த படம் தயாராகிறது. இதில் பிரபல ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்களும் நடிக்கின்றனர். நான்கு இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கின்றனர். இருபதுக்கும் மேற்பட்ட துணை இயக்குநர்கள் இணைந்து ஒருவாரத்தில் படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொம்ப பெருமையா இருக்கு
வீணாவை தனது படத்தில் நடிக்க வைப்பது குறித்து கூறிய, தயாரிப்பாளர் சதீஷ் ரெட்டி, எனது படம் சாதனைகளை முறியடிப்பது ஒருபக்கம் இருந்தாலும் வீணாவைப் போன்ற அழகான ஒரு நடிகை எனது படத்தில் இருப்பதுதான் பெரிய பெருமையாக உள்ளது. அவருடன் சேருவது பெரும் சந்தோஷம் என்று குஷியாக கூறியுள்ளார்.
Post a Comment