இடைவிடாது ஷூட்டிங்கில் பங்கேற்றதால் ஸ்ருதி ஹாசன் மயங்கி விழுந்தார். பிரபுதேவா இந்தியில் இயக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் புனே அருகிலுள்ள போர் பகுதியில் இடைவிடாது நடந்துவருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஒரு நாள் பிரேக் எடுத்துக்கொண்டு கடந்த சில நாளுக்கு முன் சென்னை வந்தார் ஸ்ருதி. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சுயநினைவில்லாமல் இருந்த அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஓய்வெடுக்க கூறினர். 'தொடர்ந்து ஷூட்டிங்கில் ஓய்வில்லாமல் பங்கேற்றதால் உடல் சோர்ந்து மயங்கிவிட்டார். இப்போது பரவாயில்லை. மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்' என்று ஸ்ருதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment