நம் வீட்டில் உள்ள மழலைகள் செய்யும் குறும்புகளை நாள் முழுவதும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். அவர்களின் ஒவ்வொரு செயலும் ஒரு படிப்பினையை ஏற்படுத்தும். அவர்களின் பேச்சும், சிரிப்பும் நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துபவை. இதுபோன்ற மழலைகள் செய்யும் குறும்புத்தனங்களை படம் பிடித்து ஒளிபரப்புகிறது சன் டிவி.
‘குட்டி சுட்டீஸ்’ என்ற புதிய நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகளின் குறும்புகளை தொகுத்து வழங்குகிறார் இமான் அண்ணாச்சி. ஏற்கனவே ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்கண்ணே’ நிகழ்ச்சியின் மூலம் ஞாயிறன்று காலை நேரத்தில் அனைவரையும் கேள்வி கேட்டு கலங்கடிக்கும் இமான் அண்ணாச்சி மாலை நேரத்தில் குழந்தைகளிடம் சிக்கிக் கொண்டு முழிக்கிறார். இந்த குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.
குழந்தைகளுக்கு என்று ஒரு சேனல் இருக்கையில் இது ஏன் சன் டிவியில் என்று பார்க்கிறீர்களா? அதுதான் ஸ்பெசல். சனி மற்றும் ஞாயிறு மாலையில் சினிமா மட்டுமே ஒளிபரப்பி வந்த சன் டிவியில் இப்போது மாறுதலாக நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளன.
அது சரி இந்த நிகழ்ச்சிக்கு ஏன் கோட் போட்டீங்க அண்ணாச்சி?
Post a Comment