ரஜினிக்கு கதை சொன்னது உண்மையா?

|

I do not tell any story to Rajinikanth

ரஜினிக்கு கதை சொன்னது நிஜமா என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர் கே.வி.ஆனந்த். இதுபற்றி அவர் கூறியதாவது: ரஜினியை சந்தித்து கதை சொன்னதாக கிசுகிசு வருகிறது. அவரிடம் எந்த கதையும் சொல்லவில்லை. அவரை இயக்கும் வாய்ப்பு வந்தால் ஏற்பேன். இப்போதைக்கு என் கைவசம் கதை எதுவும் தயாராக இல்லை. வேலை இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறேன். விரைவில் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுத தொடங்குவேன்.

'மாற்றான்' படத்தை பற்றி கலப்படமான விமர்சனம் வந்திருக்கிறது. சிலர் பாராட்டி இருக்கிறார்கள். சிலர் தலையில் குட்டி இருக்கிறார்கள். இப்படத்தின் கதையை பொருத்தவரை நடைமுறைக்கு சாத்தியமான விஷயத்தை கருவாக எடுத்துக்கொண்டோம். சூர்யா நடித்ததால் அதை சரியாக செய்ய முடிந்தது. ரஷ்ய நாட்டை விமர்சிப்பதுபோல் ஸ்கிரிப்ட் இருப்பதாக கூறுகிறார்கள். கற்பனையான ஒரு நாட்டின் பெயரில்தான் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தணிக்கையில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இருப்பதற்காக 10 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கே.வி.ஆனந்த் கூறினார்.
 

Post a Comment