கிரிஜா புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.சரவணன் தயாரிக்கும் படம், 'மாதவனும் மலர்விழியும்'. அஸ்வின், சிஜா ரோஸ், நீரஜா, பொன்னம்பலம் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, நித்யா. இசை, வசந்தமணி. பாடல்கள், ரவீந்திரன். எழுதி, இயக்கும் மாசில் கூறும்போது, 'காதலில் வென்று வாழ்க்கையில் இணைந்த பரத நாட்டிய தம்பதிகள், எதிர்பாராவிதமாக பிரிகின்றனர். பரதமே வாழ்க்கை என்று வாழ்ந்து வரும் அவள், ஆண் துணையில்லாமல் என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறாள்? அதிலிருந்து அவள் மீண்டாளா என்பது கதை' என்றார்.
Post a Comment