பிறந்த நாள் அமிதாப்புக்கு ரஜினி வாழ்த்து

|

Rajini in Amithab Birthday

நடிகர் அமிதாப் பச்சன் நேற்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் மற்றும் இதர இந்தி திரைப்பட பிரமுகர்களும், நண்பர்களும், உறவினர்களும், ரசிகர்களும் அவருக்கு நேரிலும்; போனிலும், டுவிட்டரிலும் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். பிறந்தநாளை முன்னிட்டு ஜூகுவில் உள்ள அவரது வீடு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஏராளமான ரசிகர்கள் வீட்டின் முன் கூடி நின்று ஆடியும் பாடியும் இனிப்புகளை வழங்கியும் தங்கள் அபிமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடினர். இவர்களில் பலர் பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய வடமாநிலங்களில் இருந்து வந்திருந்தனர். அப்போது காரில் அந்தேரியில் உள்ள 7 ஹில்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த அமிதாப் பச்சன் உற்சாகமாக ரசிகர்களுக்கு கைகளை உயர்த்தி காண்பித்தபடி ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.

மருத்துவமனையில் நீரிழிவு நோயை பரிசோதனை செய்யும் தானியங்கி கருவி ஒன்றை மும்பையில் உள்ள இங்கிலாந்து நாட்டு துணை தூதர் அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார். அமிதாப் பச்சன் நீரிழிவு நோய் குறித்து இந்தியாவில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கோரேகாவில் உள்ள பிலிம் சிட்டியில் அமிதாப் பச்சன் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் ஷாருக்கான், மாதவன், மாதுரி தீட்ஷித், கரண் ஜோகர் உட்பட பல நடிகர், நடிகைகள் உள்பட ஏராளமான சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆடிப்பாடி கோலாகலமாக கொண்டாடினர். சுமார் 40 ஆண்டுகளில் அமிதாப் பச்சன் 180 படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 3 முறை மத்திய அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றவர். 14 முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர். மத்திய அரசின் பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளையும் பெற்றவர்.
 

+ comments + 6 comments

vijay
13 October 2012 at 16:37

superstar rajni rockzzzzzzzzzzzzzzzzzzzzz

abu
13 October 2012 at 16:38

thalaivar is beautiful

srinivas
13 October 2012 at 16:39

thalapathy rajni superaa irukaar

raja
13 October 2012 at 16:41

thalaiar rockzzzzzzzzzzzzzzzzzzzz

suresh
13 October 2012 at 16:41

superstar boss

mugesh
13 October 2012 at 16:42

thalaivar rajni don

Post a Comment