சன் தொலைக்காட்சியில் 850 எபிசோடுகளுக்கு மேல் ஓடி இல்லத்தரசிகளை பாடாய் படுத்திய உறவுகள் தொடருக்கு ஒருவழியாய் முற்றும் போட்டுவிட்டனர்.
இந்த தொடரின் பெயர்தான் ‘உறவுகள்'. ஆனால் கதையில் அண்ணன் - தம்பி, கணவன் - மனைவி இடையே கூட ஒற்றுமை இல்லாத ஒரு சீரியல் என்றால் அது இதுவாகத்தான் இருந்திருக்கும். சான் மீடியா நிறுவனம் தயாரித்த உறவுகள் தொடரில் ஸ்ரீகுமார், ராஜ்காந்த், பீலிசிவம், நீபா, துர்கா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
இந்த கதை முதலில் பங்காளிச் சண்டையாக ஆரம்பித்தது. பின்னர் ராஜ்காந்த் இரண்டு மனைவிகளை திருமணம் செய்து கொண்டு அல்லாடினார். இரண்டாவது மனைவியே வில்லியாக மாறி இடைஞ்சல் கொடுக்கவே கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியமல் விழிபிதுங்க ஆரம்பித்தார் இயக்குநர்.
800 வாரம் வரை ஜவ்விழுப்பு இழுத்த இந்த தொடருக்கு படிப்படியாக டிஆர்பி குறைய ஆரம்பிக்கவே 850 வாரங்களுக்கு மேல் இழுக்க முடியாமல் ( டிவி நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க) ஒருவழியாக சுபம் போட்டு முடித்துவிட்டனர். அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட முடியாது. ஏனெனில் அடுத்ததாக ஏதாவது அழுகாச்சித் தொடரைப் போட்டு மக்களை இம்சிக்க ரெடியாக இருப்பார்கள் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.
Post a Comment