எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளில் சூப்பர் ஹிட்டான பல படங்களின் ஒளிப்பதிவாளர் ஏ சபாபதி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 50.
உணவு ஒவ்வாமை மற்றும் மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார்.
மணிவண்ணன் இயக்கிய 40 படங்களுக்கும் மேல் சபாபதிதான் ஒளிப்பதிவு செய்தார். கங்கை அமரனின் பெரும்பாலான படங்களுக்கு ஒளிப்பதிவு சபாபதிதான். அவற்றில் கரகாட்டக்காரன் குறிப்பிடத்தக்க படமாகும்.
இளம் வயதிலேயே கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சபாபதி.
Post a Comment