இயக்குநர் / நடிகர் சசிகுமாருடன் நடிப்பதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை ஹன்ஸிகா.
தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ என அனைத்து நிலைகளிலும் ஜெயித்து சாதனை புரிந்துள்ளவர் சசிகுமார்.
சுந்தரபாண்டியன் மூலம் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக மாறியுள்ளார்.
பலரும் அவர் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்ஸிகா நடிப்பார் என்று கூறப்பட்டது. இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வந்த நிலையில், அவற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஹன்ஸிகா.
அவர் கூறுகையில், "என்னை யாரும் அணுகவே இல்லை. சசிகுமார் என்ன படம் நடிக்கிறார் என்றும் தெரியாது. இந்த நிலையில், நான் அவருக்கு ஜோடி என்று பொய்யான செய்தி வருவதை நான் விரும்பவில்லை. அந்த மாதிரி சீப் பப்ளிசிட்டி எனக்கு வேண்டாம்," என்றார்.
இப்போது சிங்கம் 2, வாலு, வேட்டை மன்னன் உள்பட நான்கு தமிழ்ப் படங்களிலும், இரண்டு தெலுங்குப் படங்களிலும் ஹன்ஸிகா நடித்து வருகிறார்.
Post a Comment