சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வாய்ப்பு தேடி வரும் இளைஞர்களுக்கு செல்வராகவன் உதவ முன் வந்துள்ளாராம். ஆம், அடுத்த 2 வருடத்தில் 7 படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளாராம் செல்வராகவன். 'திறமையுள்ள, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எனக்கு மெயில் பண்ணுங்கள்' என்று சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டாராம் செல்வராகவன். அவர் வெளியிட்ட 2 மணி நேரத்திலேயே 500க்கும் மேற்பட்ட மெயில்கள் வந்து சேர்ந்ததாம். அத்தனை மெயில்களையும் நிதனமாக படித்து பிறகு, அதில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து வாய்ப்பு தரப் போகிறாராம் செல்வராகவன்.
Post a Comment