பெண்களை ஏமாற்றும் வெளிநாட்டு மாப்பிள்ளை கதை படமாகிறது. 'என்னவோ பிடிச்சிருக்கு', 'எழுதியது யாரடி' படங்களை தயாரித்த ஸ்ரீகந்தராஜா இயக்கும் படம் 'சிக்கி முக்கி'. இது பற்றி அவர் கூறியதாவது: வெளிநாட்டு மோகத்தால் சிலர், தங்கள் மகள்களை அங்கிருந்து வரும் மாப்பிள்ளைகளை பற்றி சரிவர விசாரிக்காமல் திருமணம் செய்து வைக்கின்றனர். அப்படி சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் கதைதான் இது. டாக்டருக்கு படித்திருப்பதாக கூறி ஒரு பெண்ணை மயக்கி அவரையே மணந்துகொண்டு வெளிநாடு செல்கிறார் ஹீரோ. அங்கு சென்றதும் குடும்பத்தைபற்றி நினைக்காமல் தொழிலிலேயே கவனமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் இறக்கிறாள். அடுத்து நடந்தது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ். ஜித்தேஷ் ஹீரோ. திஷா பாண்டே ஹீரோயின். கஞ்சாகருப்பு சூரி, நகுலன், புதுமுகம் பூஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லியோ.டி. ஒளிப்பதிவு. கவுதம் இசை. ஆர்.செந்தில்குமார் தயாரிப்பு. இதன் ஷூட்டிங் 50 நாட்கள் மலேசியாவில் நடந்துள்ளது. இவ்வாறு இயக்குனர் ஸ்ரீகந்தராஜா கூறினார்.
Post a Comment